காதலர்தினம்

ஆரவாரமில்லா காலை நேரத்தை
அழகால் அள்ளித்தெளித்து
ஆர்ப்பரிக்கவந்த அன்பு தேவதை
நீ

சுட்டெரிக்கும் பகல் பொழுதை
காதலால் கடைந்தெடுத்து
குளிர்விக்க வந்த காதல் தேவதை
நீ

அரவமில்லா இரவு நேரத்தை
அன்பால் அணைத்தெடுத்து
அரவணைக்க வந்த ஆசை தேவதை
நீ

எனக்கில்லை உனக்கில்லை
காதலர்தினம்
எமக்கென்றுமே காதலர்தினம்
தான்!

❤❤

- ஜம்பி


Comments