புன்னகையைத் தவிர பதிலில்லை
நான் உங்களுக்கு
பணத்தைப்பற்றி எழுதும்போது
பணப்பேயாகவும்
தோல்வியைப்பற்றி எழுதும்போது
கோழையாகவும்
பொய்யைப்பற்றி எழுதும்போது
பொய்யனாகவும்
ஏமாற்றத்தைப்பற்றி எழுதும்போது
ஏமாளியாகவும்
பெண்ணைப்பற்றி எழுதும்போது
பெண் பித்தனாகவும்
காதலைப்பற்றி எழுதும்போது
காதல் மன்னனாகவும்
காமத்தைப்பற்றி எழுதும்போது
காமப்பிசாசாகவும்
தெரிந்த நான்
சுவனத்தைப்பற்றி எழுதும்போது
மட்டும்
நரகவாதியாகத் தெரிகிறேன்.
பதிலில்லை என்னிடம்
புன்னகையைத் தவிர....

Comments
Post a Comment