இன்னொரு நான்

எனது பிரதியை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அது ஒன்றும் இலகுவான காரியமல்ல. அது ஒரு போராட்டம். சில நேரங்களில் எங்கே என்னை நானே இழந்துவிடுவேனோ என்ற பயமே பயமுறுத்தும். செதுக்க முடிவெடுத்த எனக்கு சவால்கள் கூட வெறும் அனுபவங்கள் தான். அதன் செயல் என்னைப்போலவே இருக்கும். எல்லாம் என்னைப்போலவே செய்யும். நான் ரசிப்பதையே ரசிக்கும். நான் விரும்புவதையே விரும்பும். எனக்கும் வலிக்கும் போது அதற்கும் வலிக்கும். ஆனால் அது வெற்றியல்ல. ஒரு நாள் அது என்னைப்போலவே சிந்திக்கும். அன்று வெற்றியை கொண்டாடுவேன். அன்று நான் எனது பிரதியை உலகிற்கு காட்டுவேன். அதற்கு பல வருடங்கள் ஆகலாம். அதற்குள் நீங்களே உலகத்தை விட்டுப் பிரிந்திருக்கலாம்.  ஒருவேளை அதற்குள் நானே உலகத்தை விட்டுப் பிரியவேண்டி ஏற்பட்டால் அது தானாக தன்னை செதுக்கிக்கொண்டு என்னைப் பிரதிபலிக்கும்.  கனவு தான் என்று சொல்வது கேட்கின்றது.  இருக்கட்டும் நனவு என்று சொன்னால் அது கனவாக இருந்திருந்தால் தானே முடியும். என்ன சொல்கிறேன் என்று உங்களுக்கு புரியாவிட்டாலே பாதி வெற்றி தான்.

- ஜம்பி

Comments